கொரோனா இன்னும் முடியலை! பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துங்க! மத்திய அரசு அறிவுரை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

14/06/2022

கொரோனா இன்னும் முடியலை! பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துங்க! மத்திய அரசு அறிவுரை

  இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.இந்தியாவில் 3 அலைகளாக கொரோனா பரவியது. கொரோனா வைரஸால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதோடு கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர்.இதையடுத்து ஊரடங்கு உள்பட கொரோனா தடுப்பு வழிமுறைகள் நடைமுறை செய்யப்பட்டன. மேலும் கொரோனா தடுப்பூசிகள் கண்டுப்பிடித்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய கூட்டு முயற்சியால் இந்தியா கொரோனா பாதிப்பு குறைந்தது. 

அதிகரிக்கும் கொரோனா


இந்நிலையில் தான் சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரிக்க துவங்கி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த இரு தினங்களாக தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவானது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.


மத்திய அமைச்சர் ஆலோசனை


இந்நிலையில் தான் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக பல அறிவுரைகளை வழங்கினார்.


கொரோனா இன்னும் முடியலை


இதில் மான்சுக் மாண்டவியாக கூறுகையில், ‛‛கொரோனா இன்னும் முடியவில்லை. பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காண தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டும். மரபணு வரிசைமுறை ஆய்வில் கவனம் செலுத்த வேண்டும். சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை செயல்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு தடுப்பூசிகொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். 12 முதல் 17 வயது நிரம்பியவர்களை கண்டறிந்து 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் . இதன்மூலம் தடுப்பூசியின் பாதுகாப்போடு அவர்கள் பள்ளிகளில் சேருவதை உறுதி செய்ய வேண்டும்.


60 வயது நிரம்பியவர்களிடம் கவனம்


அதேபோல் 60 வயதுக்கு அதிகமாக மக்களை பாதுகாப்பதிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நோய் எளிதில் பாதிக்கக்கூடிய மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் தேவையான தடுப்பூசிகள் உள்ளது. சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திவ வருகின்றனர். இதனால் தடுப்பூசிகளை வீணாக்காமல் மக்களுக்கு செலுத்த ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்ட வேண்டாம்'' என கூறியுள்ளார்

No comments:

Post a Comment