பி.இ., 2ம் ஆண்டில் மாணவர்கள் சேரலாம் - ஆசிரியர் மலர்

Latest

24/06/2022

பி.இ., 2ம் ஆண்டில் மாணவர்கள் சேரலாம்

இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர, ஜூலை 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதி வாய்ந்த டிப்ளமா, பி.எஸ்சி., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேரலாம்.
தமிழகத்தில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும், அண்ணா பல்கலை துறை மற்றும் உறுப்புக் கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை, சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் இரண்டாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள், www.tnlea.com; www.accet.co.in; www.accetedu.in ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஜூலை 23 விண்ணப்பிக்க கடைசி நாள். இந்த ஆண்டு பி.இ., - பி.டெக்., பட்டப் படிப்பு இரண்டாம் ஆண்டு கலந்தாய்வு, இணையதளம் வழியாக மட்டுமே நடக்கும்.மேலும் விபரங்களுக்கு, 04565 - 230801, 04565 - 224528 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459