இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை ( BaseLine Survey) 06.05.2022-க்குள் முடிக்க சிறப்பு அலுவலர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

02/05/2022

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை ( BaseLine Survey) 06.05.2022-க்குள் முடிக்க சிறப்பு அலுவலர் உத்தரவு.

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டங்களிலும் அனைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மையங்களுக்கு வரும் மாணவர்களின் கற்றல் நிலையினை அறிந்து கொள்வது மிக முக்கியம். எனவே அதனை அறிந்து கொள்ளும் விதமாக கற்றல் மாணவர்கள் அடைவுகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் அடையவேண்டிய அனைத்து பாடங்களுக்கும் அடிப்படை ஆய்வு ITK கைப்பேசி செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 தன்னார்வலர்கள் மையத்திற்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை ஆய்வினை மேற்கொண்டு 6.05.2022 க்குள் முடிக்க வேண்டும். அடிப்படை ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அதனை மேற்கொள்ளும் விதம் குறித்த வழிகாட்டுதல்கள்

காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே அனைத்து தன்னார்வலர்களுக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள் , மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459