ரூ.54,000/- ஊதியத்தில் DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

29/05/2022

ரூ.54,000/- ஊதியத்தில் DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Research Associate பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
நிறுவனம்Defence Research and Development Organisation (DRDO)
பணியின் பெயர்Research Associate
பணியிடங்கள்03
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022 & 15.06.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள Research Associate பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Research Associate கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry, Physics, Material Science, Electronics போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Research Associate அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் Research, Design & Development, Teaching போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Research Associate வயது விவரம்:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

SC / ST / PH பிரிவினருக்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

DRDO சம்பளம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.54,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

DRDO தேர்வு செய்யும் விதம்:

Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.06.2022 நாள் முதல் 15.06.2022 நாள் வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

DRDO Notification Link

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459