மே மாத ராசி பலன் 2022: மே மாதத்தில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏன் தெரியுமா? - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

02/05/2022

மே மாத ராசி பலன் 2022: மே மாதத்தில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏன் தெரியுமா?

 


மே மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. மே மாதம் சித்திரை வைகாசி மாதங்கள் இணைந்த மாதம். சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம். இந்த மாதத்தில் பண வரவு அதிகரிக்குமா?, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும் என்று துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு ராசிபலன்களைப் பார்க்கலாம்.இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷத்தில் சூரியன், ராகு, ரிஷபத்தில் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் செவ்வாய் சனி, மீன ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். சுக்கிரன் மே 17 ஆம் தேதி செவ்வாய் மீன ராசிக்கு மாறுகிறார். 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம்,ரிஷபம், மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.


துலாம்


சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்கள் ராசி நாதன் நல்ல வேலை கிடைக்கும். சூரியன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் மனதில் உற்சாகம் ஏற்படும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுக்கிரன் மாத பிற்பகுதியில் இடப்பெயர்ச்சியாகி ராசிக்கு ஏழாம் வீட்டில் உள்ள ராகு உடன் இணைகிறார். சுக்கிரன் பார்வை கிடைப்பதால் திருமண பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெறும். பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரமாக பாதுகாக்கவும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். முக்கியமான முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யலாம். புதிய வேலை தொடர்பாக இந்த மாதம் முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். மாணவர்களுக்கு இந்த மாதம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் மாத இறுதியில் புதிய முயற்சிகளை வைத்துக்கொள்ளவும். உணவு விசயங்களில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம். கண்டதை சாப்பிட்டால் உடல் நல பிரச்சினை வந்து விடும் கவனம் தேவை.


விருச்சிகம்


செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. சனிபகவான் பார்வை உங்க ராசி மீதும் பத்தாம் வீட்டின் மீதும் விழுகிறது. குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. லாப ஸ்தானத்தின் மீதும், பாக்ய ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சிலருக்கு புதிய தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். மாத பிற்பகுதியில் சூரியனும் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வருகிறார். எப்போதோ செய்த விண்ணப்பத்திற்கு இப்போது நல்ல பதில் வரும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். நல்ல முடிவு கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்தி தேடி வரும். பண வரவு நன்றாக இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதையும் நிதானமாக யோசித்து முடிவு செய்யவும். மாணவர்கள் இந்த மாத பிற்பகுதியில் நல்ல முடிவு எடுக்கலாம். போட்டி தேர்வுக்காக தயாராகலாம். இந்த கால கட்டத்தில் வெளிநாடு பயணங்கள் வேண்டாம் ஒத்திப்போடவும். ராகு கேது சஞ்சாரம் உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். கவனம் தேவை.


தனுசு


குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள். உங்க ராசி அதிபதி நான்காம் வீட்டில் இருப்பதால் சுகமான மாதமாக அமைந்துள்ளது. சுக்கிரன் உச்சம் பெற்று 4ஆம் வீட்டில் இருக்கிறார். 5ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். நன்மைகள் அதிகம் நடைபெறும். சனி விலகியதால் மன நிம்மதி அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்த மனக்குழப்பம் கவலை நீங்கும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். இது பிரச்சினைகள் தீரும் மாதம். தொழில் வருமானம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி கிடைக்கும். செவ்வாய் நான்காம் வீட்டிற்கு சென்று குரு உடன் இணைவதால் திருமணம் கை கூடி வரும். மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்கும். முடிந்த வரை ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யுங்கள் முதியவர்களுக்கு உணவு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். ஒருமுறை குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.


மகரம்


சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே மே மாதத்தில் குரு சுக்கிரன் சாதகமாக உள்ளனர். மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு யோகம் தேடி வரும். மே 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் ரிஷபத்திற்கு செல்வது நல்ல அமைப்பு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் காரமான உணவுகளை சாப்பிடாதீங்க. செவ்வாய் மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டிற்கு செல்வதால் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு சாதமான மாதம். எதிரிகள் தொல்லை ஒழியும். நோய்கள் நீங்கும் மருத்துவ செலவுகள் நீங்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையா இருங்க. கூடுதல் கவனம் தேவை. காதல் முயற்சிகள் கைகூடி வரும் திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். சனி பகவானை சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.


கும்பம்


சனிபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதத்தில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். 3ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் நன்மைகள் நடைபெறும். செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்வது நல்ல அம்சம். மாத பிற்பகுதியில் சூரியன் 4ஆம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்வையிடுகிறார். இரண்டாம் வீட்டில் குரு இருப்பதால் சிறப்பான சாதகம். வேலையில் புரமோசன் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் சாதமான அம்சத்தில் இருக்கிறார். புது வீடு வாங்கலாம். ராசியில் செவ்வாய் சனி சேர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உழைப்பிற்கு ஏற்ப உயர்வு கிடைக்கும். மேலும் நன்மைகள் நடைபெற சனிபகவானை சனிக்கிழமை விரதம் இருந்து வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.


மீனம்


குருபகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... உங்கள் ராசி நாதன் குரு உங்கள் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். உங்க ராசியில் சுக்கிரன் குரு சேர்க்கை மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சுக்கிரன் உச்சமடைந்திருப்பதால் அதிகமாக இன்ப சுற்றுலா செல்வீர்கள். வங்கிக்கடன்கள் கிடைக்கும். வீடு கட்ட அரசு அப்ரூவல் கிடைக்கும். செவ்வாய் சனி விரைய ஸ்தானத்தில் பண வரவு அதிகரித்தாலும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறையும். எந்த ஒரு விசயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்வது நல்லது பண விசயங்களில் எச்சரிக்கை தேவை. மகிழ்ச்சியான மன நிலை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459