CUET(UG)–2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எப்போது? க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? - ஆசிரியர் மலர்

Latest

04/04/2022

CUET(UG)–2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எப்போது? க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 


நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான () விண்ணப்ப செயல்முறை வரும் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூலை மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பலகலைக்கழக மானியக் குழு முன்னதாக தெரிவித்தது. மேலும், ஆர்வம் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவையும் இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் கூறியது.தமிழ், ஆங்கிலம், இந்தி, கனடா, மலையாளம் உட்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். இந்த, தேர்வு நான்கு பிரிவுகளைக் கொண்டதாய் இருக்கும். முதல் பிரிவில் உள்ள இரண்டு பகுதிகள் தேர்வர்களின் மொழியறிவுத் திறனை சோதிப்பதாக அமையும். இரண்டாவது பகுதி மாணவர்களின் துறை சார்ந்த அறிவை சோதிக்கும். மூன்றாவது பிரிவு, மாணவர்களின் பொது அறிவு மற்றும் தன்னிறைவை பரிசோதிக்கும். இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் ... என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 6ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022 ஆகும். தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு (...) செல்லவும். 2022 குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை அங்கு காணலாம்.கல்வித்தகுதி, வயது, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ... மற்றும் ....வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். : -@.. என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459