பெண் குழந்தையின் கல்வி செலவுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் - புதிய விதிமுறை - ஆசிரியர் மலர்

Latest

25/04/2022

பெண் குழந்தையின் கல்வி செலவுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் - புதிய விதிமுறை

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக்கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளில் யார் யாரெல்லாம் தொடங்கலாம் என்பது பலருக்கு இன்னும் தெரியவில்லை.

இது பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக துவக்கப்பட்டது. இந்த திட்டத்தில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை சமிபத்தில் மாற்றி அமைத்தது அதை பற்றி பார்க்கலாம்.

ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இந்த கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். அருகில் உள்ள அஞ்சலகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோர்கள் தொடங்கலாம்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இதற்கு முன் வயது 10-ஆக இருந்தது தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தலாம்.

10வயதுக்கு முன்பாகவே பெண் இறந்தால், அல்லது வேறு எதாவது நோயால் அவதிப்பட்டு வந்தால் கணக்கை மூடிக்கொள்ளலாம். ஆனால் முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை மூட முடியும்.

இந்த திட்டத்தில் சேர்ந்தால் 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும். ஆனால் முன்பு அப்படி இல்லை

ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த விதியை மாற்றி மூன்றாவது குழந்தை பிறந்தால் கூட மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதல் இரண்டு பெண் குழந்தை இரட்டை குழந்தையாக பிறந்து இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459