பணிப்பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

13/04/2022

பணிப்பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாரி தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம், தலைவர் பாலகுமார், பொதுச்செயலாளர் சம்பந்தம், புதுவை மாநில விரிவுரையாளர் சங்கத்தை சேர்ந்த செம்பியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பணியிடங்கள் குறைப்பை கைவிட்டு அனைத்து ஆசிரியர் பணியிடங்களை வெளிப்படையாக காண்பித்து கலந்தாய்வு முறையில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ள அனைத்து நிலை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். விரிவுரையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் சூழலை கைவிட வேண்டும். ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

No comments:

Post a Comment