நடுரோட்டில் படுத்து.. தலை முடியை பிடித்து.. மாறி மாறி அடித்துக்கொண்ட மாணவிகள்! சென்னையில் பரபரப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

27/04/2022

நடுரோட்டில் படுத்து.. தலை முடியை பிடித்து.. மாறி மாறி அடித்துக்கொண்ட மாணவிகள்! சென்னையில் பரபரப்பு

  புதுவண்ணாரப்பேட்டையில் பேருந்து நிலையத்தில் அரசு கல்லூரி மாணவிகள் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு பெண்கள் பலர் படித்து வருகிறார்கள்.கல்லூரி முடித்து மாணவிகள் மாலை நேரத்தில் புது வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் பஸ் ஏறுவது வழக்கம்.

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் நேற்று பேருந்து ஏறுவதற்காக பல்வேறு மாணவிகள் காத்து இருந்தனர். அப்போது இரண்டு மாணவிகள் திடீரென அங்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மாறி மாறி இரண்டு மாணவிகளும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டிக்கொண்டனர். இதனால் அருகே இருந்தவர்கள் பலர் கூடி அந்த மாணவிகள் சண்டை போட்டதை வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

மோதல்


வாய் தகராறு நேரம் செல்ல செல்ல சண்டையாக முடிந்தது. இரண்டு மாணவிகளும் மாறி மாறி குடுமியை பிடித்து அடித்துக்கொள்ள தொடங்கினர். இதையடுத்து மாணவிகளின் தோழிகள் அவர்களை பிரித்து விட முயன்றனர். ஆனாலும் இரண்டு மாணவிகளும் விடாமல் சண்டை போட்டனர். போக போக சண்டை தீவிரம் அடையவே மற்ற மாணவிகளும் களத்தில் இறங்கி சண்டை போட்டனர்.

சண்டை


மாறி மாறி மாணவிகள் பலர் தாக்கிக்கொண்டனர். சாலையிலேயே படுத்து உருண்டு.. தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் அங்கு மாணவிகள் இப்படி தாக்கிக்கொண்டனர். அந்த கல்லூரி மாணவர்கள் சிலர் வந்து இந்த சண்டையை தடுக்க முயன்றனர்.

ஆனால் அப்போதும் கூட அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டனர். கடைசியில் அந்த பகுதிக்கு போலீசார் வந்தனர். அப்போதுதான் சண்டை போட்ட மாணவிகள் சமாதானம் அடைந்தனர். இது தொடர்பாக மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காதல் விவகாரம் காரணமாக சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. சாலையில் சண்டை போட்ட மாணவிகள் ​10 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

No comments:

Post a Comment