இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகளில் வருகிறது திருத்தம் - ஆசிரியர் மலர்

Latest

01/04/2022

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகளில் வருகிறது திருத்தம்

புதிய கல்வி கொள்கைப்படி, தொழில்நுட்ப படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான கல்வி தகுதியில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. 


இதன்படி, தமிழகத்திலும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் திருத்தப்பட உள்ளன.ஒவ்வொரு மாநிலத்திலும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படுகிறது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள், இந்த கல்வி கொள்கையை எதிர்த்து வருகின்றன. ஆனாலும், புதிய கல்வி கொள்கையை நேரடியாக ஏற்காவிட்டாலும், அதன் அம்சங்கள் அமலுக்கு வந்த வண்ணம் உள்ளன.



இந்நிலையில், புதிய கல்வி கொள்கையின்படி, இன்ஜினியரிங், டிப்ளமா மற்றும் முதுநிலை படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான கல்வி தகுதியில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.அதன்படி, தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விதிகள் மாற்றப்பட உள்ளன.பி.ஆர்க்., படிப்பு, வேளாண் இன்ஜினியரிங்,கணினி அறிவியல், அச்சு தொழில்நுட்பம், 'பயோ டெக்னாலஜி' போன்ற பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 வகுப்பில் கணிதம் படிக்காத, அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் சேரும் வகையில், மாற்றம் செய்யப்பட உள்ளது.இதற்காக, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியும், வரைவு விதிகளை தயார் செய்யும் பணியை துவக்கியுள்ளன.அடுத்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங்கில், திருத்திய விதிகள் அமலுக்கு வரும் போது, பிளஸ் 2 அறிவியல், தொழிற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவு மாணவர்களும், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்படும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459