*AIFETO*
*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*
*மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் அலைபேசி வழியாக பெற்றுள்ள பயனுள்ள அவசர தகவல்.*
*07.04.2022 இரவு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு மலை சுழற்சி மாறுதல் பற்றி நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை தொடர்பாக கேட்டறிந்தார். மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் வழக்கு விசாரணை 26 வது இடத்திற்கு வந்துள்ளதால் நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் .மிக விரைவில் தீர்ப்பினை பெற்று ஏப்ரல் மாதமே விடுபட்ட ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வினை மேலிடத்தின் அனுமதியைப் பெற்று உடன் நடத்தி முடிப்பதாக உறுதி பட நம்மிடம் தெரிவித்துள்ளார்கள். தொடக்கக் கல்வி துணை இயக்குனர் வழக்கு பிரிவினை பார்ப்பவர் அன்றாடம் நீதிமன்றம் சென்று நிலைமைதனை அறிந்து தகவல் அளித்து வந்ததை நாம் மனமுவந்து பாராட்டி தான் ஆக வேண்டும்.
*
*மழலையர் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களை கூடுதல் பணியிடத்தில் பணி நிரவல், பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தூத்துக்குடி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் ஊதிய நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளிகளிலும் கூடுதல் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இந்த பாதிப்பில் உள்ளார்கள். துறைத் தலைவர்கள் IFHRMS தொகுப்பு தலைமைக்கு கூடுதல் பணியிடத்தை Creation Place ஆக மாற்றம் செய்து ஆணை வழங்கினால் தான் ஏப்ரல் மாத ஊதியம் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்கள்.*
*தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான் என்பதை அறிந்தோம். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம் .11ஆம் தேதி பள்ளிக் கல்வி மானிய கோரிக்கை நிறைவு பெற்றவுடன் நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்குனர் அவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளார்கள்.*
*மாவட்ட அளவில் வருவாய் மாவட்ட பொதுக்குழு வினை ஏப்ரல் 10,17 ஆகிய தேதிகளில் கூட்டி 2022 உறுப்பினர் சேர்க்கையினை முடித்து பட்டியலுடன் மே 1ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் புத்துணர்ச்சியுடன் சந்தித்து பொங்கிவரும் இயக்க உணர்வினை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள். உறுப்பினர் சந்தா மாநில, மாவட்ட பங்குகளை தவறாமல் செலுத்தி செயற்குழுவில் தகவலினை தெரிவிக்க வேண்டுமாய் கல்வி மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*தொடர்ந்து பதிவில் முகமும் காண்போம்.*
*வாழ்த்துகளுடன் அண்ணன்.*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*
*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*
*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*
*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.*
No comments:
Post a Comment