மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்- சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

07/04/2022

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு செல்லும்- சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு


மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக ஆட்சி கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 %இடஒதுக்கீடு வழங்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். இசஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459