மனசு வலிக்குது! 2 குழந்தைகளின் தந்தையாக வேதனையா இருக்கு..\" வருந்தும் அன்பில் மகேஷ்! எதற்கு தெரியுமா - ஆசிரியர் மலர்

Latest

23/04/2022

மனசு வலிக்குது! 2 குழந்தைகளின் தந்தையாக வேதனையா இருக்கு..\" வருந்தும் அன்பில் மகேஷ்! எதற்கு தெரியுமா

 


தமிழ்நாட்டில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.கடந்த சில காலமாகவே பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தரக்குறைவாகப் பேசுவது, அட்டகாசம் செய்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. 

திருப்பத்துார்

சமீபத்தில் கூட திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரேக்கார்ட் நோட் சமர்ப்பிக்கும்படி ஆசியர்கள் கூறியதால், பிளஸ் 1 மாணவர்கள் சிலர் மிரட்டினர். அவரை ஆபாசமாகப் பேசி, அடிக்க முயலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மொத்தம் 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2 குழந்தைகளின் தந்தை


சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, "மாணவர்களை அந்தந்த பள்ளிகளிலேயே இறுதி தேர்வை எழுத அனுமதிக்கப்படுவது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். ஆசிரியரிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வதை நினைத்தால் வேதனையாக உள்ளது. இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, துறை அமைச்சராக மட்டுமில்லாமல் இரண்டு குழந்தைகளின் தந்தையாக நான் வேதனைப்படுகிறேன்" என்றார்.


நல்வழிப்படுத்த வேண்டும்


மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆசிரியர்கள் கோபத்தில் திட்டுவதைக் கூட இப்போதெல்லாம் மாணவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காலத்தில் அடித்துத் தான் மாணவர்களை வளர்த்தார்கள். ஆனால், இப்போது அதெல்லாம் நடப்பதில்லை. ஒரு மாணவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே அடித்தார்கள். ஆனால், இப்போது எந்தவொரு ஆசிரியரும் மாணவர்களை அடிப்பதில்லை. எடுத்துச் சொல்லித் தான் புரிய வைக்கிறார்கள்மாணவர்களுக்குத் தண்டனைஅதையும் தாண்டி வரம்பு மீறி சிலர் நடந்து கொள்ளும் போது, அவர்களைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் சில தண்டனைகளைக் கொடுக்க வேண்டி உள்ளது. தவறு செய்தால் தண்டை கிடைக்கும் என்பதை இந்த வயதிலேயே உணர வைக்கவே தண்டனை வழங்கப்படுகிறது. இப்போது கூட மாணவர்கள் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் அவர்களை இறுதி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றே அறிவுறுத்தி உள்ளோம்.


எங்கள் பொறுப்பு


இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் வகுப்புகளில் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தான் எங்கள் பொறுப்பு, அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போலவே தமிழ்நாட்டிற்கு என்று தனியாகக் கல்விக் கொள்கையை உருவாக்குவோம் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகிறது. பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா, கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என அனைத்தும் மருத்துவ வல்லுநர்கள் உடனான ஆலோசனைக்குப் பின் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.


மன ரீதியான மாற்றம்


கொரோனா தொற்றுக்குப் பின்னர், இப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் மன ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்வது நமது கடமை. மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார். : 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459