மாணவர்களுக்கு POSO விழிப்புணர்வு மற்றும் போட்டி நடத்துதல் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி! - ஆசிரியர் மலர்

Latest

21/03/2022

மாணவர்களுக்கு POSO விழிப்புணர்வு மற்றும் போட்டி நடத்துதல் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி!

இன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் பரவலாக பெருகிவரும் தீய பழக்கவழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல் தற்காத்துக் கொள்ளவும் அவ்வாறு அடிமையாகும் மாணவர்களை ஆசிரியர்கள் இனம்கண்டு அவர்களை நல்வழி படுத்தவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது.

ஏனெனில் போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது . இப்பிரச்சனையானது சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் சவாலாகவும் மிகுந்த அசிசுறுத்தல் வாய்ந்ததாகவும் உள்ளது . இது தொடர்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டு வரவும் பள்ளி அளவிலான குழுவை அமைத்து கண்காணிக்க திட்ட ஒப்புதல் குழுவின் 2021-2022ஆம் நிதியாண்டிற்கான equity கூறுகளின் கீழ் , அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளிலும் Project for Students overcoming Substance Abuse ( POSO ) பயிற்சி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தை MHRD பரிந்துரைத்துள்ளது.

இத்திட்டத்திற்காக ரூ .78.198 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது . Project for Students overcoming Substance Abuse ( POSO ) பயிற்சியானது மாணவர்களுக்கு அளிக்க கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
POSO Awareness & Training Schedule spd Proceedings - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459