பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒருமுறை மட்டுமே பென்சன்(ஓய்வூதியம்) வழங்கப்படும் என பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மன் அதிரடியாக அறிவித்தார். இதன்மூலம் மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் எனவும், இது மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. இங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் ஆம்ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.ஒருமுறை மட்டுமே பென்சன்இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்களின் பென்சன் தொகையை குறைத்துள்ளதாக அவர் இன்று அறிவித்தார். இதுதொடர்பாக பகவந்த் மான் தான் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியத்திற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதை பஞ்சாப் மக்களின் நலனுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் ஒருவர் எத்தனை முறை எம்எல்ஏவாக ஆகி இருந்தாலும் அவர் ஒருமுறை மட்டுமே பென்சன் பெறுவார். மேலும் அவரது குடும்பத்துக்கான அலோவன்ஸ் தொகையும் குறைக்கப்படும்.ரூ.5.25 லட்சம் வரை பென்சன்சில முன்னாள் எம்எல்ஏக்கள் ஓய்வூதியமாக ரூ.5.25 லட்சம் வரை பெறுகின்றனர். இது மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் உள்பட அரசியல் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதாக கூறி இரு கைகளை கூப்பி ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் மூன்று, நான்கு, ஐந்து முறை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலோ வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கில் பென்சன் பெறுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இந்த புதிய உத்தரவு குறித்து அதிகாரிகளுக்கு வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் எவ்வளவுபஞ்சாப்பில் எம்எல்ஏவாக பதவி வகித்த ஒருவருக்கு மாதம் ரூ.75 ஆயிரம் பென்சனாக வழங்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு அடுத்தடுத்த காலத்துக்கும் 66 சதவீதம் கூடுதலாக பென்சன் வழங்கப்படுகிறது. இதை தான் பகவந்த் மான் தடுத்து நிறுத்தி உள்ளார். இதற்கு பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது.முன்னாள் முதல்வரின் செயல்இதற்கிடையே முன்னாள் முதல்வரும், 11 முறை எம்எல்ஏவான சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சியின் பார்கஷ் சிங் பாதல், தனது ஓய்வூதியத்தை ஏற்க மாட்டேன். இதை பஞ்சாப் அரசே சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும். இல்லாவிட்டால் ஏழைகளின் கல்விக்கு உதவி செய்ய பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
ஆசிரியர் மலர் செய்திகள்
To Join => Whatsapp கிளிக்
செய்யவும் To Join => Facebook கிளிக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
செய்யவும்
25/03/2022
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒருமுறை மட்டுமே ‛பென்சன்’; பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடி
பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒருமுறை மட்டுமே பென்சன்(ஓய்வூதியம்) வழங்கப்படும் என பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மன் அதிரடியாக அறிவித்தார். இதன்மூலம் மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் எனவும், இது மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. இங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் வெறும் 18 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் ஆம்ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பகவந்த் மான் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.ஒருமுறை மட்டுமே பென்சன்இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்களின் பென்சன் தொகையை குறைத்துள்ளதாக அவர் இன்று அறிவித்தார். இதுதொடர்பாக பகவந்த் மான் தான் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியத்திற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதை பஞ்சாப் மக்களின் நலனுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் ஒருவர் எத்தனை முறை எம்எல்ஏவாக ஆகி இருந்தாலும் அவர் ஒருமுறை மட்டுமே பென்சன் பெறுவார். மேலும் அவரது குடும்பத்துக்கான அலோவன்ஸ் தொகையும் குறைக்கப்படும்.ரூ.5.25 லட்சம் வரை பென்சன்சில முன்னாள் எம்எல்ஏக்கள் ஓய்வூதியமாக ரூ.5.25 லட்சம் வரை பெறுகின்றனர். இது மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் உள்பட அரசியல் தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதாக கூறி இரு கைகளை கூப்பி ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் மூன்று, நான்கு, ஐந்து முறை வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலோ வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கில் பென்சன் பெறுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இந்த புதிய உத்தரவு குறித்து அதிகாரிகளுக்கு வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் எவ்வளவுபஞ்சாப்பில் எம்எல்ஏவாக பதவி வகித்த ஒருவருக்கு மாதம் ரூ.75 ஆயிரம் பென்சனாக வழங்கப்படும். அதன்பிறகு ஒவ்வொரு அடுத்தடுத்த காலத்துக்கும் 66 சதவீதம் கூடுதலாக பென்சன் வழங்கப்படுகிறது. இதை தான் பகவந்த் மான் தடுத்து நிறுத்தி உள்ளார். இதற்கு பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது.முன்னாள் முதல்வரின் செயல்இதற்கிடையே முன்னாள் முதல்வரும், 11 முறை எம்எல்ஏவான சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சியின் பார்கஷ் சிங் பாதல், தனது ஓய்வூதியத்தை ஏற்க மாட்டேன். இதை பஞ்சாப் அரசே சமூக பணிகளுக்கு செலவிட வேண்டும். இல்லாவிட்டால் ஏழைகளின் கல்விக்கு உதவி செய்ய பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a Comment