தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு காலம் தாழ்த்துவது நியாயம்தானா? - ஆசிரியர் மலர்

Latest

17/03/2022

தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு காலம் தாழ்த்துவது நியாயம்தானா?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பல ஆண்டுகளாக வெளி மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர் அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்வதற்காக மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கின்றனர் மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அனைத்து கலந்தாய்வு நிறைவு பெற்றுவிடும் என தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் மலைசுழற்சி கலந்தாய்வு வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காலம் தாழ்த்துவது மேலும் பணி மாறுதல் கலந்தாய்வு தள்ளி போவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மாண்புமிகு கல்வி அமைச்சர் கூறியதைப் போன்று தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் கலந்தாய்வு தள்ளிப் போவது அவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும் கலந்தாய்வு நடைபெறுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் உடனே தலையிட்டு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வை விரைந்து நடத்தி முடித்திட வேண்டும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

என மாறுதல் கலந்தாய்வுக்கு காத்திருக்கும் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் கோரிக்கை. 

3 comments:

  1. தலைமை ஆசிரியர் இல்லாமல் ஒரு வருடமாக ஓர் ஆசிரியராக பணியாற்றுகிறார். முடியல

    ReplyDelete
    Replies
    1. பணியாற்றுகிறேன்

      Delete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459