பள்ளியில் அவமானப்படுத்திய ஆசிரியர்.. 30 ஆண்டுகள் கழித்து படுகொலை செய்த மாணவர்! 101 முறை கத்தி குத்து - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/03/2022

பள்ளியில் அவமானப்படுத்திய ஆசிரியர்.. 30 ஆண்டுகள் கழித்து படுகொலை செய்த மாணவர்! 101 முறை கத்தி குத்து

 பள்ளியில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் பெல்ஜியம் இளைஞர் பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2020இல் 59 வயதான ஆசிரியர் மரியா வெர்லிண்டன் என்பவர் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.அன்று நடந்த சம்பவம்.. இந்திய வரலாற்றில் முதல்முறை.. 2 இந்த வழக்கை விசாரணை செய்த போலீசாருக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த வழக்கு பெல்ஜியம் போலீசாருக்கு பெரும் புதிராகவே இருந்து வந்தது.பள்ளிஇந்தச் சூழலில் தான் 37 வயதான குட்னர் உவென்ட்ஸ் என்பவரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது. அதாவது 1990களின் முற்பகுதியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மரியா வெர்லிண்டனின் வகுப்பில் தான் இவர் பயின்று வந்துள்ளார். அப்போது ஏழு வயது சிறுவனாக இருந்த தன்னை பற்றி ஆசிரியர் மரியா வெர்லிண்டனின் ஒருபோதும் நல்ல கருத்துகளைக் கூறவில்லை என்றும் அதில் இருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என்றும் உவென்ட்ஸ் தெரிவித்துள்ளார்.கொடூர கொலைகடந்த 2020இல் 59 வயதான வெர்லிண்டனின் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். வீட்டின் அருகே இருந்த உணவகத்தின் அருகே சுமார் 101 முறை கத்தியால் குத்தப்பட்டு, கொடூரமான நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளையின் போது ஏற்பட்ட மோதலில் வெர்லிண்டன் கொல்லப்பட்டிருக்கலாம் என முதலில் தகவல் வெளியான நிலையில், அவரது பர்ஸில் இருந்து ஒரு ரூபாய் கூட திருடப்படவில்லை என்பதால், வேறு கோணங்களில் போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கினர். இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. உளறிய கொலையாளிஇருப்பினும், அதில் கொலையாளி யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மனம் உடைந்த வெர்லிண்டனின் கணவர். தனது மனைவியின் கொலை குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் கூறும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும், அப்போதும் கூட எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் தான் சமீபத்தில் வெர்லிண்டனை கொலை செய்தது தொடர்பாக குட்னர் உவென்ட்ஸ் தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது நண்பர் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையிலேயே குட்னர் உவென்ட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் மாணவர்இதையடுத்து உவென்ட்ஸிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்று அதைக் குற்றம் நடந்த இடத்தில் இருந்த டிஎன்ஏ மாதிரிகளுடன் போலீசார் ஒப்பிட்டுப் பார்க்க முடிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் முன்னாள் மாணவர் என்பதால், இதற்கு முன்னரும் உவென்ட்ஸின் டிஎன்ஏ மாதிரியை போலீசார் சோதனை செய்துள்ளனர். இருப்பினும், அதில் இருந்து உவென்ட்ஸ் எப்படித் தப்பினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.பழிக்குப்பழிஇந்தக் கொலை தொடர்பாக உவென்ட்ஸ் விரிவான விளக்கங்கள் உடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடக்கப்பள்ளியில் தனது ஆசிரியரால் அவதிப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதில் இருந்து மீண்டு வர முடியாமல் அவதிப்பட்டதாகவும் இதனால் பழிக்குப் பழி வாங்கும் வகையிலேயே மரியா வெர்லிண்டனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். உவென்ட்ஸ் வீடற்றவர்களுக்குத் தொடர்ந்து பல உதவிகளைச் செய்துள்ளார் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

No comments:

Post a Comment