10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் மலர்

Latest

26/03/2022

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்காக பொதுத்தேர்வு அட்டவணைகள் அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பின் படி 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் , 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை  https://tnschools.gov.in/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வகுப்புகளுக்கும் பாடவாரியான பொதுத்தேர்வு அட்டவணைகளும் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விரவரங்கள் அனைத்தையும் சேகரித்து அந்தந்த பள்ளிகளே விண்ணப்பிக்கும்.
அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. தேர்வெண் பட்டியலை
http://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறி விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இதுவரை பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள், மார்ச் 28 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459