தேர்வு கண்காணிப்பு பணி டி.ஆர்.பி.,க்கு கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/02/2022

தேர்வு கண்காணிப்பு பணி டி.ஆர்.பி.,க்கு கோரிக்கை

முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான கண்காணிப்பு பணியில், ஆசிரியர்களுக்கு அவரவர் மாவட்டங்களை ஒதுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தலைவர் லதாவுக்கு, மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் மணிவாசகன் அனுப்பியுள்ள கடிதம்:டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளுக்கு, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், ஒவ்வொரு ஆசிரியருக்கும், அவர்கள் பணியாற்றும் மாவட்டத்தை விட்டு தொலைதுாரத்தில் பணி ஒதுக்கப்பட்டது.இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். 

எனவே, தற்போது நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளுக்கு, இதுபோன்று நீண்ட துாரத்தில் பணி ஒதுக்காமல், அவரவர் மாவட்டத்திலேயே பணி வழங்க வேண்டும். இதன் வாயிலாக, தேர்வை சிறந்த முறையில் நடத்த முடியும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு இடையே, தேர்வு பணிகளையும் ஆசிரியர்களால் எளிதாக கவனிக்க முடியும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459