இல்லம் தேடி கல்வி: இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து சேர்க்க உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




27/01/2022

இல்லம் தேடி கல்வி: இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து சேர்க்க உத்தரவு

இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து. இல்லம் தேடி கல்வி மையங்களில் சேர்க்க வேண்டும் என ஆசிரிய ஒருங்கிணைப்பா ளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங் கால் பள்ளிகள் மூடப் பட்டதால், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள் ளது. இதனை போக்கும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி, மாணவர்களின் குடியி ருப்புகளுக்கு அருகிலேயே, தன்னார்வலர்கள் மூலம் மாலை நேரங்களில் கற் றல், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை கண்கா ணிக்க வட்டார அளவில் 2 பேரும், மாவட்ட அள வில் ஒருவரும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்க ளாக நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் என்னென்ன என தெரிவிக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக் குநர், அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு மாதமும் இல்லம் தேடிகல்விட்ட தன்னார்வலர்களை ஒருங் கிணைத்துபயிற்சி வழங்க வேண்டும். நாள்தோறும் 2 அல்லது 3 மையங் களை நேரடியாகசென்று பார்வையிட வேண்டும். மையங்களில் உரிய கற்றல், கற்பித்தல் பொருட்கள் வழங்கப்பட்டிருப்பதை யும், மையங்கள் பாதுகாப் பான இடத்தில் இருப்ப தையும் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளி டம் உரையாடி அவர் களை உற்சாகப்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதியில் இடைநிற்றல் மாணவர்களை கண்ட றிந்து,இல்லம்தேடிகல்வி மையங்களில் இணைக்க வழிவகை செய்ய வேண் டும். மேலும் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் பள் ளியில் சேர்க்கப்படாத மாணவர்களை, தன் னார்வலர்கள் மூலம் கண்டறிந்து, அவர்களை அனைவரும் பள்ளியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். கற்றல் விளை வுகளை பதிவு செய்ய, இல்லம் தேடி கல்வி செய லியில் தனி ஏற்பாடுகள் செய்யப்படும். பெற்றோர்களிடம் இத் திட்டத்தின் சிறப்புகுறித்து எடுத்துரைத்து, மாணவர் களை தொடர்ந்து மையங் களுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்த வேண்டும். புதிதாக மாணவர்களை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட் டத்தை பற்றிய தகவல்களை அனைத்தையும், உடனுக்கு டன்தன்னார்வலர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். மையத்தின் செயல்பாடு கள் மற்றும் மாணவர்க ளின் கற்றல் நிலைப்பற்றி, தன்னார்வலர்கள் அந்த மையம் இணைக்கப்பட் டுள்ள பள்ளி தலைமை ஆசிரியருடன் பகிர்ந்து சிறந்ததன்னார்வலர்களை கண்டறிந்து, அவர்களை உயர் அதிகாரிகளுடன் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், தன் னார்வலர்களுக்கான ஊக் கத்தொகை, அவர்களின் வங்கி கணக்கில் செலுத் தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லம் தேடி கல்வி மைய செயல்பா டுகளை ஆவணப்படுத்த செய்ய வேண்டும். தன்னார் வலர்களின் நியாயமான குறைகளை, உரிய நபர்களி டம் தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். வட்டார அளவில் தன் னார்வலர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, மையத்தின் செயல்பாடுகள், புகைப்ப டம், காணொளிகள், குறை கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட சிஇ ஓக்களும், இந்த பொறுப் புகள் மற்றும் பணிகளை, ஆசிரிய ஒருங்கிணைப்பா ளர்களுக்கு தெரிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459