மருத்துவ படிப்பு மாணவா் சேர்க்கை 7.5 சதவீத இடஒதுக்கீடு : அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை - ஆசிரியர் மலர்

Latest

 




27/01/2022

மருத்துவ படிப்பு மாணவா் சேர்க்கை 7.5 சதவீத இடஒதுக்கீடு : அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழகத்தில் மருத் துவ சேர்க்கைக்கான 7.3 சதவீத இடஒதுக்கீட்டில், சேலத்தை சேர்ந்த 2 அரசுப்பள்ளி மாணவர்கள், முதல் 10 இடத்திற்குள் இடம்பிடித்து சாதனை படைத்தனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படை யில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 24,949 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டிய லில், 14,913 பேரும் இடம்பெற்ற னர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத உள் ஒதுக் கீட்டு பட்டியலில், 1.806 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பட்டியலில், 476 மதிப்பெண் பெற்ற சேலத்தை சேர்ந்த மாணவி வெங்கடேஸ்வரி, மாநில அளவில் 4வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தை யும் பிடித்துள்ளார். அம் மாப்பேட்டை பண்டரிநாதர் தெருவைச் சேர்ந்த இவர், சேலம் கோட்டை பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர் வில் குறைந்த மதிப்பெண் பெற்ற இவர். இரண்டாவது முறையாக நீட் தேர்வெழுதி 476 மதிப்பெண் பெற்றுள்ளதுடன், மாநில அளவில் 4ம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இவரது பெற்றோர் தறித்தொழிலில் ஈடுபட்டு வரும் நிலை யில், வீட்டிலேயே தொடர்ந்து படித்து, சாதனை படைத்துள்ளதாக மாணவி 66. 8.25 பெருமிதம் தெரிவித்துள்ளார். இதே பட்டியலில், 461 மதிப்பெண் பெற்ற சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த சூரப்பள்ளி சின்னனூரைச் சேர்ந்த மாணவன் கலையர சன், மாநில அளவில் 10வது இடம் பிடித்துள்ளார். நங்க வள்ளி அடுத்த ஆவடத்தூர் அரசுப்பள்ளியில் படித்த கலையரசனின் பெற்றோர். தறித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். முதுகலை பட்டம் படித்து, இருதய சிகிச்சை நிபுணராக வேண்டும் என கலையர சன் விருப்பம் தெரிவித்துள்ளார். மாநில அளவில் முதல் 10 இடங் களுக்குள் வந்ததையடுத்து, சிஇஓ முருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருவருக்கும் விரும்பிய அரசு மருத் துவக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459