மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

09/12/2021

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

2020-2021ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படையாகக் கொண்டு , 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது . எனவே , இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 10.12.2021 முதல் 15.12.2021 வரையிலான நாட்களில்
http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று , தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி 2021-2022ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண் , பெயர் , பிறந்த தேதி , பாடத்தொகுதி , பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment