பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் தரமான முட்டை; சமூக நலத்துறை உறுதி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

28/12/2021

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் தரமான முட்டை; சமூக நலத்துறை உறுதி

'பல நிலைகளிலும் உறுதி செய்யப்பட்ட பின்னரே, சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது' என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது சமூக நலத்துறை செய்திக்குறிப்பு:சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு, முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முட்டைகளின் தரம், அளவு மற்றும் எடையை நன்கு பரிசோதித்து, நல்ல நிலையில் உள்ள முட்டைகளையே, மைய பொறுப்பாளர்கள் பெறுகின்றனர்.முட்டைகள் வாங்கும் போது அல்லது ஒரு வாரத்திற்குள்ளாக, முட்டைகளில் விரிசல் அல்லது புழுக்கள் கண்டறியப்பட்டால், அவை தனியாக வைக்கப்படுகின்றன. அவற்றுக்கு பதிலாக, புதிய முட்டைகள் பெறப்படுகின்றன.வாரம் ஒரு முறை முட்டைகள் பெறப்பட்டாலும், ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக முட்டைகளை எடுக்கும் போது, தரம் உறுதி செய்யப்படுகிறது. அதன் பின்னரே முட்டைகள் வேக வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.முட்டைகள் உள்ளிட்ட உணவுகள் தரமான முறையில் வழங்கப்படுவது, பல நிலைகளிலும் உறுதி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment