பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

06/12/2021

பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும் - ஆசிரியர்கள் வலியுறுத்தல்

'பள்ளி ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அமைப்பின் நிறுவனர் மாயவன், செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம் மாசிநாயக்கன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒழுங்கீன நடவடிக்கையை கண்டித்ததால் ஆசிரியை இந்திராவை, மாணவர் தாக்கியுள்ளார். அவரின் செயலை ஆசிரியர்கள் கண்டிக்கிறோம். இதுபோன்ற அசம்பாவிதங்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதும், ஆசிரியர்களுக்கு தக்கப்பாதுகாப்பு கொடுப்பதும் கல்வித்துறையின் கடமை. அம்மாணவரை அப்பள்ளியில் இருந்து விடுவித்து, வேறு பள்ளிக்கு அல்லது சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.தாக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாக அவ்வூர் மக்கள் அணிதிரண்டு வந்திருப்பதை பாராட்டுகிறோம்.நடக்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக சட்டம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment