1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்.! அரசு வெளியிட்ட அறிவிப்பு.! - ஆசிரியர் மலர்

Latest

06/12/2021

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்.! அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

அனைத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில் அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் என புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்தார். நவம்பர் 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கனமழை காரணமாக பள்ளிகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு மாற்று நாட்களில் அரை நாள் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டார். மேலும், அனைத்து பள்ளிகளும் தேவையான கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் அதே போல மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்க கூடாது என கூறியுள்ளார். மேலும் மாணவர்களுக்காண மதிய உணவு திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், இது குறித்தான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அட்டவணையின்படி, 1, 5 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும், 2, 4 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாநிலத்தில் உள்ள 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459