பிஎப் குறைதீா் கூட்டம் - டிச.6-க்குள் பதிவு செய்ய வேண்டும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

02/12/2021

பிஎப் குறைதீா் கூட்டம் - டிச.6-க்குள் பதிவு செய்ய வேண்டும்

சென்னை, அம்பத்தூா் மண்டல பிஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், டிச.6-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட பிஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டம், டிச.10-ஆம் தேதி, சென்னை முகப்போ சாலையில் உள்ள ஆா்-40 ஏ டிஎன்எச்பி அலுவலக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பிஎப் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோர், அதற்கான ஆவணங்களை டிச.6-ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் கூட்டம் நடைபெறும் நாளில், காலை 10.30 முதல் 11.30 மணி வரை ஊழியா்களும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையில் நிறுவன உரிமையாளா்களும், மாலை 4 முதல் 5 மணி வரையில் விலக்கு பெற்ற நிறுவனங்களும் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044 2635 0080, 2635 0120 ஆகிய எண்களை அணுகலாம்.

No comments:

Post a Comment