பெண் குழந்தைகளுக்கு ரூ50000!! தமிழக அரசு அதிரடி!! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

02/12/2021

பெண் குழந்தைகளுக்கு ரூ50000!! தமிழக அரசு அதிரடி!!

தமிழக அரசு துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது முதல்வரின் செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒன்றை முதல்வர் அறிவித்துள்ளார்.

அதில் தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி ஒரே ஒரு பெண் குழந்தை இருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ 50000ம், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 25000ம் வழங்கப்படும். இந்த தொகை குழந்தைகளுக்கு 18 வயது முடிவடைந்த பிறகு முதிர்வு தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

பயனாளிகளின் டெபாசிட் காலத்தில் இருந்து 5 வயது வரை மாதத்திற்கு ரூ150 என்ற அளவில் 18 வயது வரை வரும். அவர்களின் கல்விக்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72000க்கு குறைவாக இருக்க வேண்டும்.

குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் ஆண்டு வருமான சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று இவைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் அசல் வைப்புநிதிப் பத்திரம், பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10 ம் வகுப்பு தேர்ச்சி பட்டியல், பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தகம் இவைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment