பிளஸ் 1 மறுகூட்டல் வரும் 27ல் ரிசல்ட் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/12/2021

பிளஸ் 1 மறுகூட்டல் வரும் 27ல் ரிசல்ட்

பிளஸ் 1 துணை தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள், 27ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா, வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 துணை தேர்வு செப்டம்பரில் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. அதன்பின், விடைத்தாளில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, 27ம் தேதி பிற்பகல் 1:00 மணிக்கு திருத்திய முடிவு வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண் அடங்கிய பட்டியல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். பட்டியலில் எண்கள் இல்லாதவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் இல்லை என்று கருத வேண்டும்.மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கு மட்டும், திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் பதிவிறக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459