பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டு தோறும் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகை தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

30/11/2021

பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டு தோறும் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகை தொடர்பான இயக்குநரின் செயல்முறைகள்.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தமிழகம் முழுவதும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டு தோறும் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகை தொடர்பு.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் 06.03.2021 ம் நாளிட்ட புகார் மனுவில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர் நிலைப் பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஆண்டு தோறும் பள்ளிகளுக்கு பள்ளியை பராமரிக்கவும் , பள்ளிக்குத் தேவையான கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் பள்ளிகளுக்குத் தேவையான தளவாட பொருட்கள் வாங்கவும் பள்ளிக்கு மானியமாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிக்கு ஆண்டு தோறும் தொகை வழங்கப்பட்டு வருகிறது அதன் சார்பாக புகார் பெறப்பட்டுள்ளது.
ஆகவே பள்ளிக்கு பெறப்படும் பொருட்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தரமானதாக உள்ளனவா என்பதை ஊர்ஜிதம் செய்து எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் முறையாகவும் , வெளிப்படையாகவும் மற்றும் விதிகளுக்கு உட்பட்டும் செலவினங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment