கொட்டித்தீர்க்கும் கனமழை.. தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த உத்தரவு.. திடீர் உத்தரவில் கூறப்பட்டது என்ன - ஆசிரியர் மலர்

Latest

 




07/11/2021

கொட்டித்தீர்க்கும் கனமழை.. தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த உத்தரவு.. திடீர் உத்தரவில் கூறப்பட்டது என்ன


சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களைத் தங்க வைக்க ஏதுவாக சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளையும் திறந்து வைக்கச் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.! வானிலை ஆய்வு மையம் தலைகநர் சென்னைக்கு ரெட் அலர்டு கொடுத்துள்ளது. நகரின் பல பகுதிகளிலும் நேற்று மாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.சென்னை மழைஎழும்பூர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை சற்று நேரம் மழை ஓய்ந்திருத்தாலும் கூட, அதன் பிறகு மழை மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, இன்று காலை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். மேலும், தீபாவளிக்கு ஊருக்குச் சென்றவர்கள், 2 அல்லது 3 நாட்கள் கழித்து சென்னைக்குத் திரும்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.உதவி எண்கள்கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு சென்னை ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.தாழ்பான பகுதிகள்இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் கொண்டு வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளும் திறந்து விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமூதயக் கூடங்களில் தங்க வைக்கச் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்,பள்ளிகளைத் திறந்துவைக்க உத்தரவுதாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களைத் தங்க வைக்க ஏதுவாக சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளையும் திறந்து வைக்கச் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். பள்ளி வளாகத்துக்குள் மழை நீர் தேங்காமல் இருப்பதையும், சுற்றுச்சுவர்கள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்மேலும், பள்ளிகளில் மின் இணைப்பு முறையாக இருப்பதை உறுதிப்படுத்த செக் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளில் உள்ள கணினி உள்ளிட்ட மின்சாதனங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்களின் அறிவுரைப்படி பள்ளிகளைத் தலைமை ஆசிரியர்கள் திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459