சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை.. தனியார் நிறுவனங்களுக்கும் முதல்வர் முக்கிய உத்தரவு! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

07/11/2021

சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை.. தனியார் நிறுவனங்களுக்கும் முதல்வர் முக்கிய உத்தரவு!

 


சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய, விடிய பேய் மழை கொட்டியது. 2015-ம் ஆண்டுக்கு பிறகு 207 மிமீ மழை சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்தது.சென்னை எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர், மீனம்பாக்கம், கிண்டி என நகர்ப்புற பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.எச்சரிக்கை தேவை! சென்னை, மட்டுமல்ல இந்த பகுதிகளில்.. இன்றும் அதிதீவிர கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன்வெள்ளகாடான சென்னைஇதனால் சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன. தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கியதால் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து முடக்கம்4 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்து பல இடங்களில் முடங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் தேங்கியதால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதுமே முற்றிலுமாக முடங்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அங்கு சிக்கி தவிப்பர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.பள்ளி, கல்லூரிக்கு விடுமுறைதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களையும் முதல்வர் வழங்கினார். மக்களுக்கு உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட அதனை ஒட்டிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அரசு அலுவலங்களுக்கு விடுமுறைஇந்த நிலையில் பலத்த மழை, வெள்ளம் காரணமாக சென்னையில் அரசு அலுவலங்களுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ' சென்னையில் அரசு அலுவலங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை துறை தவிர்த்து அனைத்து துறைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள்ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை அலுவலகம் வழக்கம் போல் செயல்படும். தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..:

No comments:

Post a Comment