யுஜிசி நெட் தேர்வுக்கு அட்டவணை, ஹால்டிக்கெட் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

15/11/2021

யுஜிசி நெட் தேர்வுக்கு அட்டவணை, ஹால்டிக்கெட் வெளியீடு

யுஜிசி நெட் தேர்வுக்கு பாடவாரியான தேர்வுகால அட்டவணை, ஹால் டிக்கெட்-களை தேசிய தேர்வுமுகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுக்கு இருமுறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த டிசம்பர், ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வை நடத்த என்டிஏ திட்டமிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.10-ம் தேதி தொடங்கி, செப்.5-ம் தேதி வரை நடைபெற்றது. 
தொடர்ந்து, நெட் தேர்வுகள் நவ.20 முதல் டிச.5-ம் தேதி வரை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. அதை  http://www.nta.ac.in/மற்றும் https://ugcnet.nta.nic.in/  ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாடவாரியாக தேர்வுகால அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளங்களில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000என்ற தொலைபேசி எண் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459