அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் தகவல்.! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

23/11/2021

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் தகவல்.!

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி நகரும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment