தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் பள்ளி மாணவர்கள் வெளியூரிலிருந்து பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டுள்ளது.
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், இந்த நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் அதுவரை பழைய பஸ் பாசை காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment