ராணுவ கல்லுாரியில், மாணவர் சேர்க்கை தொடக்கம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10/10/2021

ராணுவ கல்லுாரியில், மாணவர் சேர்க்கை தொடக்கம்

 உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லுாரியில், 2022ம் ஆண்டு, 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதற்கான, நுழைவுத்தேர்வு, வரும், டிச., 12ல், நடக்கிறது. நேர்முகத்தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர், 2022, ஜூலை, 1ம் தேதியன்று, பதினொன்றரை வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும்; 7ம் வகுப்பு பயில்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லுாரி, டேராடூன் 248003, உத்தரகாண்ட் மாநிலம், என்ற முகவரிக்கு, விரைவு தபால் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

வங்கிக்கிளையில் மாற்றத்தக்க வகையில், பொதுப்பிரிவினர், 600 ரூபாய்க்கும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ஜாதிச்சான்றுடன், 555 ரூபாய்க்கு, கேட்பு காசோலை அனுப்ப வேண்டும்.இதற்கு, www.rimc.gov.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment