தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பூஜ்ய கலந்தாய்வு நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

09/10/2021

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பூஜ்ய கலந்தாய்வு நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக பூஜ்யம் காலிப்பணியிடம் அறிவித்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு வரவேற்பு - ஆசிரியர்களுக்கும் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

1633688175618217-0

மாநிலத்தலைவர் அவர்களின் பி.கே.இளமாறன் அறிக்கை :

           பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கானஇட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்கின்றேன்.

     நேர்மையான நிருவாகத்திற்கும் கல்வித்தரம் உயர்வதற்கும் அரசியல்,பணம் ஆகியவையின்றி  மாறுதல் கலந்தாய்வு  கல்விஅதிகாரிகளுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வெளிப்படையான நிருவாகத்திற்கு வழிவகுக்கும். 

 பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சீர்திருத்தங்களுக்கு முன் உதாரணமாக அமையும்.

     மேலும் இதுவரை  இயக்குநர் அவர்கள்தான் மாவட்டகல்வி அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுவந்தது. விரும்பும் இடங்களுக்கும் சொந்தஊருக்கும் செல்லமுடியாமல் சிரமம் இருந்தது.தற்போது பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் நடக்கும்போது வாய்ப்புகிடைக்கும். இதேபோன்று தலைமையாசிரியர்,  முதுகலை ஆசிரியர் தொடங்கி இடைநிலை ஆசிரியர்கள் வரை பூஜ்யம் காலிபணியிடம் அறிவித்து இடமாறுதல் கலந்தாய்வு நடத்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம். வெளிப்படைத்தன்மையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களின் நிருவாகத்திற்கு மேலும் ஒரு மைல்கல்.

       தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மாண்புமிகு. முதல்வர்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலாளர், ஆணையர் ஆகியோர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 பி.கே.இளமாறன், மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்,

  98845 86716


No comments:

Post a Comment