அண்ணா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

11/10/2021

அண்ணா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு

 சென்னை: அண்ணா பல்கலைக்கழகம்(Anna University) 312 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைக்கழகம் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 312 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Teaching Faculty பணியிடத்துக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க M.E, Ph.D, Bachelor Degree முடித்திருக்க வேண்டும்

விண்ணபிப்பதற்கான வயது வரம்பு 24-35 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 27.10.2021 ஆகும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். annauniversityrecruitmentcell@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

மேலும், The Registrar, Anna University, Chennai - 600025 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பியும் வைக்கலாம். எழுத்துத் தேர்வு, தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் தனிப்பட்ட நேர்காணல் உள்ளிட்ட நடைமுறைகளின்படி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment