1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




30/10/2021

1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

 தமிழகத்தில் கோவிட் - 19 பெருந்தொற்றுக் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9-12 ஆம் வகுப்புகளுக்கு 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்சமயம் பார்வை 3-இன்படி 1-8 ஆம் வகுப்புகளுக்கு 01.11.2021 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் தடை பெறாமல் நடைபெற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் வழங்குதல், கல்வி தொலைக்காட்சியின் மூலம் அனைத்து வகுப்புகளுக்குக் காணொலிப் பாடங்களை வழங்குதல், வானொலி நிலையங்கள் மூலமாக வானொலிப் பாடங்களை ஒலிபரப்புதல் போன்ற நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. இவை தவிர. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளாக புலனம் (Whats App) மற்றும் வலையொலி (Pod cast) மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆசிரிய - மாணவ நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வு பள்ளிச்சூழலில் நிகழாத காரணத்தாலும், இறுதி ஆண்டு தேர்வுகளின்றி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி வழங்கப்பட்டதாலும் மாணவர்களிடம் கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக: 2020 . 2021 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 2 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர்.


For Full details click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459