போட்டித் தேர்வுகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு – தேர்வர்கள் குழப்பம்! - ஆசிரியர் மலர்

Latest

24/09/2021

போட்டித் தேர்வுகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு – தேர்வர்கள் குழப்பம்!

 


.com/

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும் என வெளியாகி இருக்கும் அறிவிப்புக்கு தேர்வர்கள் மத்தியில் குழப்பங்கள் எழுந்துள்ளது.


இட ஒதுக்கீடு


தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, பெண்களுக்கு அரசுப்பணிகளில் 40% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பிலான அறிவிப்புகளை தமிழக சட்டசபை பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்திருந்தார். அந்த வகையில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள்.


மேலும் 100% நியமனத்தை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தேர்வு கட்டாயமாக்கப்படும். அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% லிருந்து 40% மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் TNPSC சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், அரசுப்பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% என்று குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459