புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: துலாம், விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்கள் நிகழும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

17/09/2021

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: துலாம், விருச்சிகம்,தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்கள் நிகழும்

 


சென்னை: புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதம் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோகங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் செய்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.புரட்டாசி பிறக்கும் போது ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், செவ்வாய், துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. கன்னி ராசியில் இருக்கும் புதன் புரட்டாசி 6 ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்கிறார். 11ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 15ஆம் தேதி மீண்டும் கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். சுக்கிரன் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். 25 ஆம் தேதி சனிபகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணம் செய்கிறார்.புரட்டாசி மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். பள்ளி மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் - கொரோனா பரவல் அச்சத்தில் பெற்றோர்கள்சந்தோஷமான மாதம்சுக்கிரன் ராசி அதிபதி ஆட்சி பெற்று கம்பீரமாக பயணம் செய்கிறார். பேச்சில் கம்பீரம் பிறக்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும் வெற்றிகள் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சவால்களை சமாளிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் தூக்கம் குறையும் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். சகோதர வகையில் சந்தோஷம் ஏற்படும். நகை, பணத்தையும், விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரமாக வைக்கவும் கவனமாக கையாளவும். வண்டி வாகனம் வாங்க நேரம் கை கூடி வருகிறது.வருமானம் அதிகரிக்கும்சொந்த தொழில் தொடங்குவதற்கு யோகம் கை கூடி வருகிறது. வெளிவட்டார தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும்.புதன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். தீராத கடன்கள் தீரும் திருப்தியும் சந்தோஷமும் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. இளம் வயதினருக்கு காதல் கை கூடி திருமணத்தில் முடியும் நேரம் வந்து விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மகாளய பட்ச காலத்தில் மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். சந்தான கோபாலகிருஷ்ணரை வணங்க புத்திர பாக்கியம் கை கூடி வரும் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புரட்டாசி மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக மாறும்.வீடு வாங்க யோகம்ராசிநாதனும் யோகநாதனும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வேலைகள் கிடைக்கும் வீடு கட்டுவது வாங்குவது வேலைகள் நிறைவேறும். காரிய வெற்றிகள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ராசிக்குள் கேது இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். செல்வாக்கும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை நீங்கும். சனி வலுவாக பயணம் செய்வதால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் வீடு மனை வாங்குவீர்கள். புது வீடு வாங்க நேரம் கை கூடி வந்துள்ளது. உங்கள் குடும்ப விசயத்தில் அடுத்தவரை தலையிட விட வேண்டாம். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வரவு வரும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மருத்துவ செலவுகள் வரம்கிரகங்கள் சாதகமாக உள்ளதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். நினைத்த கல்லூரியில் உயர்கல்வி படிக்க யோகம் கை கூடி வந்துள்ளது. நினைத்தது கை கூடி வரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நரம்பு பிரச்சினைகள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாளுடன் கூடிய தாயாரையும் தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும். திருப்பதி சென்று கோவிந்தராஜ பெருமாளை வணங்க நன்மைகள் நடைபெறும். ஆழ்வார் பாசுரங்களைப் படிக்க அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.வேலை கிடைக்கும்உங்கள் ராசி அதிபதி குரு இரண்டாம் வீட்டில் சனி சந்திரன் உடன் கூடி இருக்கும் போது மாதம் தொடங்குகிறது. செவ்வாய் ராசிக்கு பத்தாம் வீட்டில் பலமாக சூரியன், புதனுடன் பயணம் செய்கிறார். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும் புத்திரபாக்கியம் கிடைக்கும். வேலை கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். புதன் சாதகமாக பயணம் செய்வதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். காரியங்களில் வெற்றி தேடி வரும் சாதகமான பலன்கள் கிடைக்கும். ராசிநாதன் குரு 2ஆம் வீட்டில் பயணம் செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் வியாபாரத்தில் லாபம் தேடி வரும்.வியாபாரத்தில் லாபம்கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீடு வாங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சுப காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். கவலைகள் நீங்கி சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். தனியார் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கோபமான பேச்சுக்களைக் கவனிக்கவும். தலைவலி, உடல்வலியில் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமை நரசிம்மரை வணங்க யோகங்கள் கை கூடி வரும்.': இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 17 , 2021ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மகரம், கும்பம், மீன ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பீர்கள்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: சிம்மம், கன்னிராசிக்காரர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதம்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: கடக ராசிக்காரர்களுக்கு கவலைகள் தீரும் காலம்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மிதுன ராசியில் பிறந்தவர்கள் பத்ரா யோகத்தால் புது பதவி வரும்ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: ரிஷப ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரப்போகுதுஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: மேஷ ராசிக்கு பூர்வ புண்ணிய யோகம் தேடி வரும்ஜூலை மாத ராசி பலன் 2021: கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகம் தேடி வரும்ஜூலை மாத ராசி பலன் 2021: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு பொறுமை நிதானம் தேவைஜூலை மாத ராசி பலன் 2021: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்ஜூலை மாத ராசி பலன் 2021: கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் வீடு தேடி வரும்

No comments:

Post a Comment