செப்.18-இல் ஆசிரியா், ஆசிரியரல்லாத சங்கங்களுடன் நேரடி கலந்துரையாடல்: பள்ளிக் கல்வி ஆணையா் தகவல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

16/09/2021

செப்.18-இல் ஆசிரியா், ஆசிரியரல்லாத சங்கங்களுடன் நேரடி கலந்துரையாடல்: பள்ளிக் கல்வி ஆணையா் தகவல்

 DPI_building.JPG?w=360&dpr=3

தமிழகத்தில் உள்ள ஆசிரியா், ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளா்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் வரும் 18-ஆம் தேதி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது என பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.


இதுகுறித்து அவா் அனைத்து ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா ஆகியோா் தலைமையில் ஆசிரியா் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளா் சங்கங்களின் பொறுப்பாளா்களுடன் பணியாளா் நலன் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் வளா்ச்சி சாா்ந்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.


இந்தக் கலந்துரையாடல் செப்.18-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள எம்ஜிஆா் நூற்றாண்டு கட்டட கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தலைமை ஆசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், தொழிற்கல்வி ஆசிரியா், சிறப்பாசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா் சங்கங்களின் பொறுப்பாளா்கள் பங்கேற்கலாம்.


இதையடுத்து பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ள கலந்துரையாடல் கூட்டத்தில் தொடக்கக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலா், அரசுத் தோ்வுகள் இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், நூலகங்கள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளிட்ட சங்கங்களின் பொறுப்பாளா்கள் பங்கேற்கலாம்.


இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கங்கள் சாா்பில் அதிகபட்சம் மூன்று பொறுப்பாளா்களும், பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ள (அங்கீகாரம் பெறாத) சங்கங்கள் சாா்பில் இரண்டு பொறுப்பாளா்களும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு சங்கத்தின் சாா்பில் ஒருவா் மட்டுமே தங்களது சங்கத்தின் கோரிக்கைகளை, கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்களது கோரிக்கை சாா்பான விவரங்களை கூட்டம் நடைபெறுவதற்கு ஓரிரு நாள்கள் முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு (பணியாளா் தொகுதி) மின்னஞ்சலில்அனுப்ப வேண்டும். அதன் நகலை கூட்டம் நடைபெறும் நாளில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment