1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் - ஆசிரியர் மலர்

Latest

05/09/2021

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

 


திருச்சி: தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 8ஆம் தேதிக்குப் பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், 13 ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முக்கிய தகவலைப் பகிர்ந்துகொண்டார். மாணவர்களுக்கு கொரோனா செய்தியாளர்களிடம் அமைச்சர் மகேஷ் பேசுகையில், "தமிழ்நாட்டில் 9 முதல் +2 மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் ஏதாவது ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யுமாறு கூறினோம். அப்படிச் செய்ததில் நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது போல ஏற்படும் பிரச்சனைகள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.தொடங்க பள்ளிகள் திறப்பு எப்போதுதொடக்கப் பள்ளி என்பது ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. கொரோனா கட்டுக்குள் இருக்கும் இந்த சூழலில் தொடக்கப் பள்ளிகளைத் திறப்ப வரும் 8ஆம் தேதிக்குப் பின்பு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். கடந்த 8 நாட்களாக மாணவர்களின் வருகை பதிவேடு, மாணவர்கள் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.தண்டனை கூடாதுதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கூடுதல் திறன் மேம்பாட்டிற்காக சில பள்ளிகள் கூடுதலாக இயக்குகின்றனர். அப்படிச் செய்வதில் எந்த தவறும் இல்லை. அதேபோல மாணவர்கள் தாமதமாக வந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கக் கூடாது எனத் தெளிவாகக் கூறியுள்ளோம். பள்ளிகளுக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வைப்பதே முதல் நோக்கம் என்பதை எடுத்துக் கூறியுள்ளோம்.தேசிய கல்விக் கொள்கைஅதேபோல மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டிற்குத் தேவையானதை எடுத்துக் கொள்வோம். உடன்பாடு இல்லாதவை குறித்து மத்திய அரசிடம் பட்டியலிட்டுள்ளோம். நகர்ப்புற மாணவர்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிராமப்புற மாணவர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.12 ஆயிரம் வழக்குகள்பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. ஆசிரியர்கள் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று அவர்களின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்வு காணப்படும். நிதி நிலைமை சீராக இருந்த காலத்திலேயே கடந்த ஆட்சியில் 6 முறை அகவிலைப்படி வழங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தபோதும் பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தூய்மை பணியாளர்கள்நிதி நிலைமை சீராக இருந்த காலத்திலேயே கடந்த ஆட்சியில் 6 முறை அகவிலைப்படி வழங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தபோதும் பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் தூய்மை பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை விரைவில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459