மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு. ( இணைப்பு: அரசாணை - ஆசிரியர் மலர்

Latest

05/08/2021

மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு. ( இணைப்பு: அரசாணை

 


பள்ளிக் கல்வி - மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - இணைப்பு: அரசாணை.

IMG_20210805_111644

முன்னாள் " குடியரசுத் தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணன் " அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினவிழாவாகக் கொண்டாடப்பட்டு , அவ்விழாவில் தொடக்க / நடுநிலை | உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான " டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது " வழங்கப்பட்டு வருகின்றது . 2. 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் . இராதாகிருஷ்ணன்விருது வழங்கும் விழா 05.09.2021 அன்று ஆசிரியர் தினவிழாவாக நடைபெற உள்ளது. எனவே , பார்வை ( 1 ) ல் கண்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளவாறு , பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் , சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநில நல்லாசிரியர் விருதிற்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நேர்வில் , மாவட்ட அளவில் குழு அமைத்து வருங்காலங்களில் எவ்வித புகார்களுக்கும் , இடமளிக்காவண்ணம் பார்வையில் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி , ஆசிரியர்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து , அவர்களின் விவரங்களையும் மற்றும் கருத்துருக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாகப் பூர்த்தி செய்து 20.08.2021 - க்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( இடைநிலைக் கல்வி ) அவர்களது பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Good Teacher Award - DSE Proceedings And GO - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459