இதோ.. இந்த 5 மாவட்டங்களில் இன்று பொளந்து கட்ட போகுது மழை.. 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இதோ.. இந்த 5 மாவட்டங்களில் இன்று பொளந்து கட்ட போகுது மழை.. 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்

 


சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் நன்கு மழை குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது... கடந்த 2 நாளைக்கு முன்பும்கூட வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது..அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 18 மாவட்டங்களில், மொத்தம் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. அந்தஅறிக்கையில் சொன்னதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், புதுச்சேரி மற்றும் சென்னை மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.செங்கல்பட்டு24.08.2021: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.காரைக்கால்25.08.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.லேசான மழை26.08.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்" என்று தேதிவாரியாகவும் மாவட்ட வாரியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.ஆய்வு மையம்ஆனால், இன்றைய தினம் மேலும் ஒரு வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி, சென்னை-சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது... இது தொடர்பாகவும் ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.மேலடுக்கு சுழற்சிஅதில், " தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், இடி, மின்னலுடன், இன்று கன மழை பெய்யும்... மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், மிதமான மழை பெய்யும்.தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில், வரும், 27ம் தேதி வரை மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளதுகனமழைஅதாவது ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 26-ம்தேதி வரை அதாவது நாளை மறுநாள் வரை கனமழை பெய்யும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், இது மேலும் கூடுதல் தகவலாக வெளியாகி உள்ளது.. ஆக மொத்தம் தமிழகம் முழுவதும் அடுத்த 2,3 நாளைக்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.: 

No comments:

Post a Comment