செப்டம்பர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

செப்டம்பர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்


 சென்னை: மேஷம், ரிஷப ராசிகளில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம், சிலருக்கு புரமோசன் தேடி வரும். ஆட்சி பெற்றசுக்கிரன் பார்வை மேஷத்திற்கும் குருவின் பார்வை ரிஷபத்திற்கும் கிடைப்பதால் இந்த மாதம் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பண வரவும்,குடும்பத்தில் குதூகலமும் ஏற்படும். கணவன் மனைவி இடையை அன்பும் நேசமும் அதிகரிக்கும்.தமிழ் மாதங்கள் ஆவணி மாதம் 15 நாட்களும் புரட்டாசி மாதம் 15 நாட்களும் இணைந்த மாதம் செப்டம்பர் மாதம். சூரியனின் பயணம் சிம்மராசியிலும் கன்னி ராசியிலும் இருக்கும். ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, குரு, கன்னி ராசியில் புதன், கன்னி ராசியில் உள்ள சுக்கிரன் செப்டம்பர் 5ஆம் தேதி துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். சிம்ம ராசியில் உள்ள செவ்வாய் மாத முற்பகுதியிலேயே இடப்பெயர்ச்சியாகி கன்னி ராசியில் பயணம் செய்கிறார். அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த குரு பகவான் மகர ராசிக்கு வக்ர கதியில் திரும்பி பின் நேர்கதியில் பயணத்தை தொடங்குகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி சேர்க்கையினால் மேஷம், ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.கிரகங்களின் சஞ்சாரம்சூரியன் - சிம்ம ராசி 15ஆம் தேதிக்கு மேல் கன்னி செவ்வாய் - சிம்ம ராசி செப்டம்பர் 5 முதல் கன்னிபுதன் - கன்னி ராசி செப்டம்பர் 22 முதல் துலாம் ராசிகுரு - கும்பம் செப்டம்பர் 14 முதல் மகர ராசிசனி - மகரம்சுக்கிரன் - கன்னி ராசி செப்டம்பர் 5 முதல் துலாம்ராகு - ரிஷபம்கேது - விருச்சிகம்மேஷம்செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் ஆரம்பமே அமர்களம் என்பது போல இந்த மாதம் நன்றாக உள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசிக்கு ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். சவால்களை சமாளிப்பீர்கள். எதிர்களால் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரும் இரண்டாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் கேது பயணம் செய்கின்றனர். புதன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு லாப வீட்டில் இருந்து 16ஆம் தேதி மகர ராசிக்கு வந்து நீச்ச பங்க ராஜயோகமாக பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரன் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. வேலையில் இந்த மாதம் புதிய மாற்றங்கள் வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் வந்தாலும் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.திருமணம் கைகூடும்சுக்கிரன் ஏழாம் வீட்டில் ஆட்சி மூலத்திரிகோணம் பெற்று பயணம் செய்வதால் பண வருமானம் அபரிமிதமாகக் கிடைக்கும். களத்திரகாரகன் சுக்கிரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம் வெற்றிகள் தேடி வரும். வரன் தேடுபவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதம். ஆறில் செவ்வாய் சூரியன் பயணிக்கும் காலத்தில் தடைகள் வந்தாலும் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செயல் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். மாணவர்களுக்கு குருவின் பார்வை கிடைப்பதால் உயர்கல்வி யோகம் தேடி வருகிறது.காதல் கைகூடும்பெண்களுக்கு இந்த மாதம் நல்ல மாதம் திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி கணவனின் ஆதரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் இணைந்து பயணம் செய்வதால் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும் உயரதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். எதிரிகள் பிரச்சினை, கடன் பிரச்சினை வரலாம். நோய்கள் எட்டிப்பார்க்கும் இந்த மாதம் சிகிச்சை எடுப்பதற்கு ரொம்ப நல்ல மாதம். நீண்ட நாட்கள் பிரச்சினை முடிவுக்கு வரும் காதல் இனிக்கும். புதிய காதல் முடிவுகு வரும். இந்த மாதம் செவ்வாய்கிழமை முருகப்பெருமானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய அற்புதங்கள் நடைபெறப்போகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் நான்காம் வீட்டில் உள்ள சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் புதன் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சனி பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் புதன் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கேட்ட இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். மாத பிற்பகுதியில் சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டிற்கு செல்வதால் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.விபரீத ராஜயோகம்ராசிநாதன் சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகிறார். கடன் பிரச்சினை நீங்கும். ஆறுக்கு அதிபன் ஆறாம் வீட்டில் ஆட்சி மூலத்திரிகோணம் பெற்று பயணம் செய்யப்போகிறார். வெற்றிகள் தேடி வரும். எதிரிகளை வெல்வீர்கள். விபரீத ராஜயோகம் கிடைக்கப் போகிறது. எதிர்பாராத பண வரவு வரும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கமும் நம்பிக்கையும் கூடி வரும். திருமண சுப காரியம் செய்ய முயற்சி செய்யலாம். வரன் பார்த்து பேசி முடிக்கலாம். உங்களுக்கு பிடித்தது போல வரன் அமையும்.அதிர்ஷ்டம் தேடி வரும்திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு சுபமான மாதமாக அமையும். குடும்ப சூழ்நிலை நன்றாக அமையும். இன்ப சுற்றுலா செல்ல ஏற்ற மாதமாகும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் யோகங்கள் தேடி வரும். ராசியில் ராகுவும் ஏழாம் வீட்டில் கேதுவும் உள்ளதால் குடும்ப விவகாரங்களை வெளி ஆட்களிடம் சொல்ல வேண்டாம். மூன்றாவது நபர்களை உங்கள் வீட்டு விசயங்களில் தலையிட விட வேண்டாம் அது சிக்கலை ஏற்படுத்தி விடும். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் அற்புதங்களும் யோகங்களும் நிறைந்த மாதமாக ரிஷப ராசிக்காரர்கள்

No comments:

Post a Comment