அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

16/07/2021

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

 


.com/அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் தரப்பில், இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி சிரமத்திற்கு ஆளாகி வரும் சூழலில் இதுபோல, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment