உலகின் சில பகுதிகளில்.. கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன.. மத்திய அரசு வார்னிங் - ஆசிரியர் மலர்

Latest

14/07/2021

உலகின் சில பகுதிகளில்.. கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டன.. மத்திய அரசு வார்னிங்

 -டெல்லி: உலகின் சில பகுதிகளில் கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் எச்சரித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரத்திற்குள் இருந்து வருகிறது.இருப்பினும், கொரோனா முழுவதுமாகக் கட்டுக்குள் வரவில்லை என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.மூன்றாம் அலைஇந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால், "கொரோனா மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் உலகின் பல இடங்களில் தோன்றத் தொடங்கிவிட்டன. இப்போது உலகெங்கும் தினசரி 3.9 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இரண்டாம் அலை ஏற்பட்ட சமயத்தில் உலகில் தினசரி ஒன்பது லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இப்போது பலநாடுகளிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.பிரதமர் மோடிகொரோனா மூன்றாம் அலையை நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடியும்கூட அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களின் கவனக்குறைவாக இருந்தால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் பிரதமர் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.தடுப்பூசி பற்றாக்குறைநாட்டின் சில பகுதிகளில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த நிலை விரைவில் மாறும். மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மாநில அரசுகள் இதில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.மாஸ்க் அணியும் பழக்கம்அதைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், "கடந்த சில வாரங்களாகப் பொதுமக்கள் மாஸ்க் அணியும் பழக்கம் குறைந்துள்ளது. மாஸ்க் அணிவதால் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது. பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459