தமிழகத்தில் மூவருக்கு டெல்டா +.. உயிரிழப்பை தடுக்க இது மட்டுமே ஒரே வழி.. ஆய்வாளர்கள் தரும் விளக்கம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் மூவருக்கு டெல்டா +.. உயிரிழப்பை தடுக்க இது மட்டுமே ஒரே வழி.. ஆய்வாளர்கள் தரும் விளக்கம்

 சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வேக்சின்கள் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களாக கொரோனா 2ஆம் அலையால் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதிலும் கடந்த மே மாதம் தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்க மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாநிலத்தில் தொடர்கிறது. தமிழ்நாட்டில் குறையும் கொரோனாதமிழ்நாட்டில் நேற்றும் 34ஆவது நாளாக வைரஸ் பரவல் குறைந்துள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 155 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பரவல் குறைந்துள்ள போதிலும், தற்போது நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ்முன்னதாக சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்ததாகச் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.முதல் உயிரிழப்புமேலும், அவர்களில் இருவர் நலமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒருவர் ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டார் என்றும் அவருடைய பரிசோதனை முடிவிலேயே அவருக்கு டெல்டா பிளஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை மையம் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என்றும் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதி ஆக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.அச்சம் வேண்டாம்டெல்டா பிளஸ் கொரோனாவால் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும். இந்த டெல்டா பிளஸ் கொரோனா தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் 40 பேருக்கு இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை டெல்டா பிளஸ் கொரோனா குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.டெல்டா பிளஸ் என்றால் என்னஇந்தியாவில் கொரோனா 2ஆம் அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் தான் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரசாக மாறியுள்ளது. இதனை .1 என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 417 எனப்படும் இந்த பிறழ்வால் கொரோனா வைரசின் வெளிப்புறத்தில் இருக்கும் புரோத ஸ்பைக்கில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஆன்டிபாடிகளில் இருந்து தப்பும் ஆற்றலை கொரோனாவுக்கு கொடுக்கலாம்.வேக்சின் முக்கியம்மத்தியப் பிரதேசத்திலும் நேற்று 6 பேருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் வேக்சின் எடுத்துக் கொள்ளாத பெண் மட்டுமே உயிரிழந்தார். தடுப்பூசி எடுத்துக் கொண்ட நான்கு பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் அவர்கள் அதிலிருந்து குணமடைந்துவிட்டனர். கொரோனா தடுப்பூசி டெல்டா பிளஸ் வைரசால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பது இதில் தெளிவாகத் தெரிகிறது.மத்திய அரசு எச்சரிக்கைமத்திய அரசும் இந்த உருமாறிய கொரோனா குறித்த எச்சரிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் பின்பற்ற வேண்டிய கொரோனா நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள் தான் என்றும் இருந்தாலும் இதனை மாநிலங்கள் தற்போது அதிக கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தடுப்பூசி வல்லுநர் குழு உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார்.ஒரே ஆயுதம்டெல்டா பிளஸ் கொரோனாவை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் இந்த வகை கொரோனா தற்போது வரை குறைவான நபர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வேக்சின் டெல்டா பிளஸ் கொரோனா உயிரிழப்பைத் தடுக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், மக்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக 2 டோஸ் வேக்சின்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்...: 

No comments:

Post a Comment