உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வளவு...சிறப்பாக இருக்கனுமா....இதோ சில டிப்ஸ். - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வளவு...சிறப்பாக இருக்கனுமா....இதோ சில டிப்ஸ்.


இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில், மக்கள் வங்கிகளில் கடன் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.நீண்ட கடன் வரலாற்றுடன்,சிறந்த சிபில் ஸ்கோர் இருக்கக்கூடிய ஒருவருக்கு மிக எளிதாகக் கடன்கள் கிடைக்கின்றன.


அதுமட்டுமல்லாது சிபில் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறையவும் வாய்ப்புண்டு. எனவே ஒருவர் தனது சிபில் ஸ்கோரை சிறப்பாகப் பராமரிப்பது அவசியமாகிறது.


சிபில் ஸ்கோர்:


சிபில் ஸ்கோர் என்பது நுகர்வோரின் கடன் மதிப்பெண் ஆகும். இது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணாகும். ஒருவர் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது, கடன் வழங்குநர்கள் சரிபார்க்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று சிபில் ஸ்கோர்.


ஒரு நபரின் கடந்தகால நிதிசார்ந்த நடத்தையே அவரது எதிர்கால கடன்கள் தொடர்பான செயல்களிலும் தொடரும் என்பதன் அடிப்படையில் சிபில் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.


கடன் ஒப்புதல் வழங்குவதற்கு முன்னர் ஒருவரின் கடனை திருப்பிச் செலுத்தும் திறனை சரிபார்க்க அவரது சிபில் ஸ்கோரை வங்கிகள் கருத்தில் கொள்கின்றன. ஒருவரது கிரெடிட் ஸ்கோர் 900 க்கு நெருக்கமாக இருந்தால், அவர் கடனுக்கு எளிதாக ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு ஸ்கோர் 300 க்கு நெருக்கமாக இருப்பது மோசமானதாக கருதப்படுகிறது.


பொதுவாக 750 மற்றும் அதற்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பது சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.சிபில் ஸ்கோரை சிறப்பாக பராமரிப்பது எப்படி?- சில உதவிக்குறிப்புகள்:


*சிபில் ஸ்கோர் சிறப்பாக அமைய ஒருவர் தனது கிரிடிட் கார்டை கவனமாக நிர்வகிக்க வேண்டும்.


*பெறக்கூடிய அனைத்து வித கடன்களுக்கான மாதாந்திர தவணைகளையும், கிரிடிட் கார்டு பில்களையும் சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் ஒரு நல்ல டிராக் ரெக்கார்டை உருவாக்க முடியும்.


*நீண்ட கடன் தவணைக்காலத்தை கவனமாக தேர்ந்தெடுப்பது சிறந்தது.


*தாமதமாக EMI செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.


*கடனில் பகுதியளவு தொகையை முன்கூட்டியே செலுத்த முயற்சிக்கலாம்.


*தேவையில்லாத நேரத்தில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.


*கடனுக்கான இணை கையொப்பமிடுவதை கவனமாகத் தவிர்க்கலாம். முன்பே கையொப்பமிடப்பட்ட கடன்களின் திரும்ப செலுத்து முறையை கண்காணிக்க வேண்டும்.


*கடன்களை சிறப்பாக நிர்வகிக்க, தேவைப்படும்போது ஒருங்கிணைப்பு கடன் வசதிகளைப் பயன்படுத்தலாம்.


*எப்போதுமே கடனுக்கான திருப்பிச் செலுத்தும் திட்டத்தை


வைத்திருப்பது அவசியம்.


*கிரிடிட் கார்டுகள் சார்ந்த பணம்செலுத்தல் நினைவூட்டல்களை அமைத்துக் கொள்வது அவசியம்.


*கிரிடிட் கார்டுக்கு சரியான பயன்பாட்டு வரம்பு வைப்பது அவசியம்.


*சிபில் அறிக்கையை வருடத்திற்கு ஒருமுறையாவது பார்ப்பது அவசியம். அதில் பிழைகள் ஏதேனும் இருப்பின் உரிய நிறுவனங்களை அணுகி தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.


*சிபில் ஸ்கோரைப் பராமரிக்க ஒரேவிதமான கடன்களைப் பெறாமல் வெவ்வேறு வகையான கடன்களை (கடன் கலவை) தேர்வுசெய்வது சிறந்தது.*கடன் பயன்பாட்டு விகிதத்தை மொத்த கடன் வரம்பில் 30% க்கும் குறைவாக பராமரிக்க வேண்டும்.


*ஒவ்வொரு முறை கடன் விண்ணப்பம் அளிக்கும்போதும் சிபில் விசாரணை (Hard inquiry) இருக்கும் என்பதால் ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கடன்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறே அடிக்கடி விண்ணப்பித்து, கடன் வாங்காமல் விடுவதும் நல்ல முடிவு இல்லை.


*நமது கடன் வரம்பை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.


*வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒருவரின் நீண்டகால தொடர்பை சித்தரிக்கும் மற்றும் நீண்ட திருப்பிச் செலுத்தும் வரலாற்றைக் காட்டும் பழைய கணக்குகளையும்,


கிரிடிட் கார்டுகளையும் முடித்துக்கொள்ளாமல் (Close) இருப்பது சிறந்தது.


*சிறந்த கடன் வரலாறு உள்ளவர்களுக்கு எதிர்காலத்தில் குறைந்த வட்டி விகிதங்களில் கடன்கள் கிடைக்கும்.எனவே வசதியான காலத்தில் ஒரு குறைந்தபட்சக் கடனைப் பெற்று திரும்ப செலுத்துவது சிறந்த கடன் வரலாற்றைப் பேண உதவும்.


*கிரிடிட் கார்டிலிருந்து நேரடியாகப் பணம் எடுப்பதை தவிர்ப்பது சிறந்தது.

No comments:

Post a Comment