இன்னும் 6 முதல் 8 வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்கும்.. எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

19/06/2021

இன்னும் 6 முதல் 8 வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்கும்.. எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை


 டெல்லி: கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது.. இன்னும் 6 அல்லது 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக் கூடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர்.ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த எச்சரிக்கை தகவலை அவர் தெரிவித்துள்ளார். நாம் இப்போது லாக்டவுனில் தளர்வுகள் கொடுத்து வருகிறோம். மக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு இன்னும் கூட இல்லை என்பதை அவர்கள் நடவடிக்கைகளை பார்த்தால் தெரிகிறது.சமூக இடைவெளி இல்லைசமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை. முதல் மற்றும் இரண்டாவது அலை காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து அதிலிருந்து மக்கள் பாடம் படிக்கவில்லை. இப்போது கூட்டம் இன்னும் அதிகம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தேசிய அளவில் கேஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்க இன்னும் சில நாட்கள் ஆகக்கூடும். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன்.6 வாரங்கள்வரும் 6 முதல் 8 வாரங்களுக்குள், கொரோனா 3வது அலை தாக்க வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கூடுதல் வாரம் கூட தேவைப்படலாம். ஆனால் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது. கொரோனாவை தடுக்க மக்கள் எந்த அளவுக்கு ஒத்துவைப்பு அளிப்பார்கள் என்பதை வைத்துதான் இது தீர்மானிக்கப்படும். கூட்டங்கள் சேருவது தவிர்க்கப்பட்டால், நிலைமை மோசமாகாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.மோசமான அலை2வது அலையின்போதே இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. முதல் அலையை விட கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டனர். இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. எனவே 3வது அலையில் மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அச்சப்படுகிறார்கள்.3வது அலைக்கு எதிராக நடவடிக்கைதமிழகம், கர்நாடகா உட்பட பல மாநிலங்கள், லாக்டவுனில் தளர்வுகளை கொண்டு வந்தபடி உள்ளன. அதேநேரம், 3வது அலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகளிலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் ஈடுபட்டு வருகின்றன. 3வது அலையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment